பிரிட்டிஷ் கொலம்பியாவில் தேர்தலில் போட்டியிடும் கழுதை!
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் கழுதை ஒன்றை தேர்தலில் களமிறக்க உள்ளதாக பெண் ஒருவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் உள்ளூர் ஆட்சி தேர்தலில் இவ்வாறு தனது கழுதையான லோபோ என்னும் கழுதையை தேர்தலில் போட்டியிடச் செய்ய திட்டம் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பவுண்டரி கன்ட்ரி பிராந்தியத்தில் அமைந்துள்ள கிராண்ட் ப்ரோக்ஸ் நகரின் மேயர் பதவி வெற்றிடத்திற்காக கழுதையை போட்டியிடச் செய்ய திட்டமிட்டுள்ளதாக லோராய்ன் கொன்னர் (Lorraine O'Connor) தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுதல் தொடர்பிலும் யார் போட்டியிடுகின்றார்கள் என்பது தொடர்பிலும் அறிந்து கொண்டு மக்கள் களைப்படைந்து விட்டதாகவும், ஓர் மாற்றம் தேவைப்படுவதாகவும் அந்த மாற்றமே லோபோ என்ற கழுதை எனவும் குறித்த பெண் தெரிவித்துள்ளார்.
தமது கழுதை சார்பில் சமூக ஊடகங்களில் விளையாட்டாக பிரச்சாரங்களை ஆரம்பித்ததாக தெரிவித்துள்ளார்.
தேர்தலில் போட்டியிடுவதற்கு மிருகங்களுக்கு சந்தர்ப்பம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் ஆவணங்களில் வேட்பாளர் ஒரு நபராக இருக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், இந்த நடவடிக்கையானது நகைச்சுவைக்காக ஆரம்பிக்கப்பட்ட தேர்தல் பிரச்சாரம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள தேர்தல் தொடர்பிலான கவனத்தை ஈர்க்க முடிந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது இந்த செயற்பாடு தேர்தல் தொடர்பில் மக்களின் கவனத்தை ஈர்க்கச் செய்துள்ளதாகவும் யாரெல்லாம் தேர்தலில் போட்டியிடுகின்றார்கள் என்பது குறித்து மக்கள் விழிப்படைய ஏதுவாகியுள்ளது எனவும் ஓ கொன்னர் தெரிவித்துள்ளார்.