டிரம்ப் வரி அதிகரிப்பிற்கு கனடாவின் கியூபெக்கோ கட்சி அதிருப்தி
கனடாவின் புளொக் கியூபிக்கோ Bloc Québécois கட்சி தலைவர் ஈவ்ஸ்-ஃபிரான்சுவா பிளாஞ்செட், டொனால்ட் டிரம்ப் விதித்த புதிய வரிகள் குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு அதிகரிப்பு டிரம்பின் தோல்வியின் அங்கீகாரமாகத் தெரிகிறது என தெரிவித்துள்ளார்.
25% வரி மட்டுமே நம்மை முடக்க போதுமானது என்று அவர் நினைத்திருந்தால், அதில் திருப்தி அடைந்திருப்பார்.
ஆனால் இப்போது அலுமினியத்துக்கும் உருக்கிற்கும் 50% வரி விதிக்கிறார்!" என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
"கனடாவின் ஒன்டாரியோவை தண்டிக்க, கியூபெக்கின் பொருளாதார விருப்பங்களை பயன்படுத்துகிறார் எனவும் இது மிகவும் விசித்திரமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, டிரம்ப் விதிக்கும் 50% வரி, அமெரிக்காவிற்கே பொருளாதார சுமையை ஏற்படுத்தும் என்று பல பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.