கனடாவில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்த டக் ஃபோர்டு
ஒன்ராறியோவில் மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளது டக் ஃபோர்டு (Doug Ford) தலைமையிலான முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி.
மொத்தமுள்ள 124 தொகுதிகளில் 83ல் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி முன்னிலையில் உள்ளது. 31 தொகுதி முன்னிலையில் உள்ள NDP உத்தியோகப்பூர்வ எதிர்க்கட்சியாக உருவாகும் என்றே கூறப்படுகிறது.
லிபரல் கட்சி 8 தொகுதிகள் முன்னிலையில் மூன்றாவது இடத்தில் உள்ளனர். ஒன்ராறியோவின் முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி 41% வாக்குகளை கைப்பறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐந்து வார கால தேர்தல் பரப்புரையின் போது ஒன்ராறியோ முழுவதும் 3 மில்லியன் குடியிருப்புகளில் வாக்கு சேகரிக்க முற்போக்கு கன்சர்வேடிவ் கட்சி ஆதரவாளர்கள் சென்றுள்ளனர்.
மட்டுமின்றி, பெரும்பாலான பரப்புரை கூட்டங்களை முதல்வர் டக் ஃபோர்டு (Doug Ford) முன் நின்று நடத்தியுள்ளார்.
இதனிடையே, மாகாணம் முழுவதும் வாக்கு எண்ணும் பணி தொடர்ந்து வருவதாகவே தகவல் வெளியாகியுள்ளது.