வட்டி வீதங்களை குறைக்குமாறு ஒன்றாரியோ முதல்வர் கோரிக்கை
வங்கி வட்டி வீதங்களை குறைக்குமாறு ஒன்றாரியோ முதல்வர் மீண்டும் கோரிக்கை முன் வைத்துள்ளார்.
வங்கி வட்டி வீதங்களை மேலும் குறைக்க வேண்டும் என அவர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடக ங்கள் மூலமாக அவர் இந்த கோரிக்கையை முன் வைத்துள்ளார்.
மத்திய வங்கி வட்டி வீதம் தொடர்பில் நாளைய தினம் கூடி தீர்மானிக்க உள்ளது.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டுமாயின் வட்டி வீதம் குறைக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஒன்றாரியோ மற்றும் கனடா முழுவதும் உள்ள மக்கள் உதவியை நாடியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
வட்டி வீதம் இன்றைய தினம் 25 அடிப்படை புள்ளிகளில் குறைக்கப்படும் என பொதுவாக எதிர்பார்க்கப்படுகின்றது.
கனடிய மத்திய வங்கி 10 வெவ்வேறு சந்தர்ப்பங்களில் வட்டி வீதத்தை அதிகரித்துள்ளது.
ஒன்றாரியோ மாகாணத்தில் புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கு மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்க வேண்டும் என முதல்வர் போர்ட் கூறியுள்ளார்.
இதேவேளை, கடந்த ஜூன் மாதம் நாட்டின் பண வீக்கம் 2.7 விதமாக பதிவாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.