அமெரிக்க விசா லொட்டரி முறையில் அதிரடி மாற்றம்
அமெரிக்காவின் ‘எச் 1-பி’ (H-1B) விசா கட்டணம் இந்திய மதிப்பில் ரூ.90 இலட்சமாக உயர்த்தப்பட்டதையடுத்து, விண்ணப்பங்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் விளைவாக, விசா தேர்வு விகிதம் முன்பைவிட அதிகரித்து சுமார் 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் சிறப்பு நிபுணத்துவம் கொண்ட வெளிநாட்டு தொழிலாளர்களை பணியமர்த்த ஆண்டுதோறும் 85,000 எச் 1-பி விசாக்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
எனினும், முன்னாள் ஜனாதிபதி Donald Trump கொண்டு வந்த விதிமுறை மாற்றங்களின் அடிப்படையில், விசா கட்டணம் பெரிதும் உயர்த்தப்பட்டது.
புதிய விதிகளின்படி, வழக்கமாக இருந்த பொதுவான லொட்டரி முறை மாற்றப்பட்டு, அதிக ஊதியப்பணிகளுக்குத் தகுதியானவர்களுக்கு கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த மாற்றங்களால், அமெரிக்க நிறுவனங்கள் எச் 1-பி விசாவுக்கான நிதி உதவியை குறைத்துள்ளன.
வழக்கமாக ஆண்டுக்கு சுமார் 7 இலட்சம் விண்ணப்பங்கள் கிடைத்த நிலையில், இவ்வாண்டு அது 2.35 இலட்சமாக குறைந்துள்ளது.
விண்ணப்பங்கள் குறைந்ததால், முன்பு சுமார் 33 சதவீதமாக இருந்த தேர்வு வாய்ப்பு தற்போது 75 சதவீதம் வரை உயர்ந்துள்ளது.

இது தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்கியுள்ளது.
மேலும், அமெரிக்க தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தற்போது Artificial Intelligence துறையில் அதிக முதலீடு செய்து வருவதால், ஆரம்ப நிலை ஊழியர்களை விட அனுபவம் வாய்ந்த பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் நிலை உருவாகியுள்ளது.
இதேவேளை, விசா கட்டண உயர்வை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகள் அமெரிக்க நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன.