சாரதியொருவர் சுட்டுக்கொலை: ஒன்றாரியோவில் பரபரப்பு சம்பவம்
ஸ்காபரோவில் டெக்ஸி (Taxi) சாரதியொருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பார்மசி அவன்யூ மற்றும் எக்லின்டன் அவன்யூ ஆகியனவற்றுக்கு அருகாமையில் பதிவாகியுள்ளது.
டாக்ஸி ஒன்று மதில் சுவரில் மோதியுள்ளமை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அறிவித்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் டாக்ஸி சாரதி காயமடைந்து சுயநினைவுயின்றி இருந்ததை கண்டுள்ளனர்.
தூப்பாக்கிச்சூடு படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சாரதி, சிகிச்சை பலன்றி உயிரிழந்துள்ளார். Beck Taxi என்னும் நிறுவனத்தின் பணியாளரான சாரதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.