சிறுவர்கள் நிறைந்த பூங்காவிற்குள் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 23 வயது இளைஞர் கைது

Canada
By Kamal Jul 28, 2026 04:08 AM GMT
Report

 கனடாவின் அஜாக்ஸ் பகுதியில் குழந்தைகள் மற்றும் பொதுமக்கள் அதிகம் நிறைந்திருந்த பூங்காவிற்குள் ஆபத்தான முறையில் காரைச் செலுத்தி அச்சுறுத்தல் ஏற்படுத்திய 23 வயது இளைஞர் மீது துர்ஹாம் பிராந்திய பொலிஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கடந்த ஜூலை 18 அன்று மாலை 6:30 மணியளவில், 'லேக் டிரைவ்வே வெஸ்ட்' பகுதியில் உள்ள 'ரோட்டரி பூங்காவில்' வெள்ளை நிற டொயோட்டா ரக கார் ஒன்று ஆபத்தான முறையில் இயக்கப்படுவதாக பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது.

சிறுமிகள், சிறுவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் நடமாடிக் கொண்டிருந்த விளையாட்டுக் களம், நீர் விளையாட்டுக் களம் மற்றும் நடைபாதைகளின் வழியே அந்த கார் வேகமாகச் செலுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

சிறுவர்கள் நிறைந்த பூங்காவிற்குள் ஆபத்தான முறையில் காரைச் செலுத்திய 23 வயது இளைஞர் கைது | Driving Through Playground Packed With Children

அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. சம்பவ இடத்தை விட்டுச் சென்ற அந்த காரை, பூங்காவிலிருந்து சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் 'வெஸ்ட்னி வீதி தெற்கு' மற்றும் 'பேலி வீதி மேற்கு' பகுதியில் கண்டறிந்த பொலிஸார் அதை நிறுத்த முயன்றனர்.

ஆனால், காரை ஓட்டிவந்த நபர் பொலிஸாரிடமிருந்து தப்பித்து, மீண்டும் அதே பூங்காவிற்குச் சென்று பாதசாரிகள் செல்லும் பாலத்தின் வழியே காரைச் செலுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 'ஹார்வுட் அவென்யூ தெற்கு' மற்றும் 'பேலி வீதி கிழக்கு' பகுதியில் அந்த காரை பொலிஸார் மறிக்க முயன்றபோது, அவர் மீண்டும் தப்பிக்க முயன்று அருகிலிருந்த ஜி.எம்.சீ ரக வாகனம் மீது மோதியுள்ளார்.

உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார் அவரைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த மோதலிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

கைது செய்யப்பட்டவர் அரோரா பகுதியைச் சேர்ந்த 23 வயதான இஸ்மாயில் அப்ராஹிம்சாதா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மீது ஆபத்தான முறையில் வாகனத்தைச் செலுத்தியமை மற்றும் பொலிஸாரின் உத்தரவை மீறி வாகனத்தை நிறுத்தாமல் தப்பியோட முயன்றமை ஆகிய பிரிவுகளின் கீழ் பொலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, Scarborough, Canada

14 Aug, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, Ottawa, Canada

06 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, கொழும்பு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands

16 Aug, 2020
நன்றி நவிலல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
நன்றி நவிலல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
7ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Queensbury, United Kingdom

17 Aug, 2017
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரம்

17 Aug, 2021
மரண அறிவித்தல்

பெரியமாவடி சாவகச்சேரி, கொழும்பு, நல்லூர்

16 Aug, 2026
மரண அறிவித்தல்

சங்கத்தானை, உசன், Whitby, Canada

16 Aug, 2026
மரண அறிவித்தல்
19ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

17 Aug, 2007
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொக்குவில் கிழக்கு, தோணிக்கல், வவுனியா, உரும்பிராய் கிழக்கு

15 Aug, 2026
மரண அறிவித்தல்

உசன், முரசுமோட்டை, Urumpirai, பிரித்தானியா, United Kingdom

15 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Ontario, Canada

17 Aug, 2017
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, புத்தூர் மேற்கு, கனடா, Canada

08 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுன்னாகம், பரிஸ், France

18 Jul, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US