கனடாவில் ட்ரோன்கள் மூலம் போதைப்பொருள் கடத்தல்
கனடாவின் சாஸ்காட்செவான் மாகாணத்தில் உள்ள Saskatchewan Penitentiary சிறைக்குள் ட்ரோன் வழியாக போதைப்பொருட்கள் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
சாஸ்காட்செவான் ரகசிய போலீசார் (RCMP) இந்த தகவல்களை வெளியிட்டுள்ளனர். ஜூலை மாத ஆரம்பத்தில், ட்ரோன் மூலம் போதைப்பொருள் கடத்தப்படலாம் என சாச்காட்செவான் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனைத் தொடர்ந்து கடந்த 9ஆம் திகதி லாயிட் Laird என்ற கிராமத்தில் உள்ள வீடொன்றில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சோதனையின் போது 172 கிராம் மெத்தாம்பெட்டமின், 112 கிராம் கஞ்சா அமுக்கப்படுத்திய பாகம் (Cannabis concentrate), ஒரு ட்ரோன், லேப்டாப், மற்றும் செல் போன்கள் ஆகியவை கைப்பற்றப்பட்டன.
வீட்டில் இருந்த இரு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்ட நிலையில், 36 வயதுடைய லேயர்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மற்றவர்கள் விடுவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இக்கைதான பெண், ஆகஸ்ட் 27 ஆம் திகதி ரொஸ்டெர்ன் Rosthern மாகாண நீதிமன்றத்தில் ஆஜராக உள்ளார்.
இந்தச் சம்பவத்தில் போதைப்பொருள்கள் சிறைச்சாலை உள்ளே கொண்டு செல்லாதவாறு பாதுகாப்பு மேற்கொள்ளப்பட்டது.
இதேவேளை, கடந்த 13ஆம் திகதி, Prince Albert RCMP-க்கு, ஒரு ட்ரோன் சிறைக்குள் பாக்கெட்டொன்றை வீசியதாக தகவல் கிடைத்தது.
இந்த ட்ரோன், சிறை அருகே நின்ற வாகனமொன்றிலிருந்து இயக்கப்பட்டது என போலீசார் தெரிவித்தனர். Lincoln Park Road பகுதியில் சந்தேக வாகனம் கண்டுபிடிக்கப்பட்டு நிறுத்தப்பட்டது.
அதில் இருந்த ஒரு ஆண் மற்றும் பெண் கைது செய்யப்பட்டனர். வாகனத்தில் ட்ரோன் மற்றும் செல் போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மேலும், சிறை அருகே விழுந்து நொறுங்கிய மற்றொரு ட்ரோன் மற்றும் சிறைக்குள் விழுந்த பாக்கெட்டும் கைப்பற்றப்பட்டன.
இதில், 60 கிராம் மெத்தாம் போதைப் பெருளும், 30 கிராம் கஞ்சா போதைப் பொருளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.