இங்கிலாந்து விமான நிலையங்களில் பெரும் குழப்பம் ; 150 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து
இங்கிலாந்தில் உள்ள விமான நிலையங்களில் ரேடார் செயலிழப்பு காரணமாக பெரும் குழப்பம் ஏற்பட்டதுடன் 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது.
இதன் விளைவாக, இங்கிலாந்தில் இருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் தரையிறக்கப்பட்டன. இந்த ரேடார் செயலிழப்பு பிரிட்டிஷ் வான்வழிப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அமைப்பான NATS (National Air Traffic Services) இல் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நிகழ்ந்துள்ளது.
விமானங்கள் ரத்து -பயணிகள் அவதி
இந்தச் சம்பவம் காரணமாக 100க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டன மற்றும் ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக லண்டன் ஹீத்ரோ மற்றும் கேட்விக் விமான நிலையங்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டன.
ரேடார் பிரச்சனை சைபர் தாக்குதல் தொடர்பானதல்ல என்று NATS உறுதிப்படுத்தியுள்ளது. இந்த தொழில்நுட்பக் கோளாறு விரைவாக மாற்று அமைப்புக்கு மாற்றப்பட்டு 20 நிமிடங்களுக்குள் சரி செய்யப்பட்டாலும், இதன் விளைவாக ஏற்பட்ட தாமதங்களும் ரத்துகளும் பல மணி நேரம் நீடித்தன.
ரியான்ஏர் (Ryanair) போன்ற சில விமான நிறுவனங்கள் இந்த சம்பவத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளன. மேலும், ரியான்ஏர் தலைமை நிர்வாகி மார்ட்டின் ரோல்ஃப் (Martin Rolfe) பதவி விலக வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
ஆகஸ்ட் 2023 இல் இதேபோன்ற ஒரு கோளாறு ஏற்பட்டதை அவர் சுட்டிக்காட்டி, எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளப்படவில்லை என்று குற்றம் சாட்டினார்.
விமான நிலையங்கள் மற்றும் விமான நிறுவனங்கள் பயணிகளுக்கு, விமான நிலையத்திற்கு வருவதற்கு முன் தங்கள் விமான நிறுவனங்களுடன் சரிபார்க்குமாறு அறிவுறுத்தியுள்ளன.