ஓஷாவாவில் ஈ-சைக்கிள் விபத்தில் ஆண் பலி
கனடாவின், ஓஷாவாவில் ஈ-சைக்கிள் மற்றும் ஒரு எஸ்.யூ.வீ SUV வாகனம் மோதியதில், 50 வயதுடைய ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார் என டர்ஹாம் பிராந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து, மதியம் 12:30 மணி அளவில் ஹார்மனி வீதி வடக்கு, ஸ்டோரி அவென்யூவிற்கும் அருகே, ராஸ்லண்ட் வீதி ஈஸ்ட் பகுதியின் வடக்கே இடம்பெற்றுள்ளது.
தெற்கே சென்ற ஈ-சைக்கிள், இடப்பக்கம் திரும்ப முயன்ற வடக்கே வந்த பியூயிக் என்கோர் (Buick Encore) வகை SUV வாகனத்துடன் மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த மோதலில், மின்சைக்கிள் ஓட்டியவர் கடுமையான காயங்களுக்கு உள்ளாகி மருத்துவமனையில் உயிரிழந்தார்.
வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே இருந்தார் எனவும் விசாரணையில் முழுமையாக ஒத்துழைத்தார் எனவும் பொலிசார் கூறியுள்ளனர்.
இந்த விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும், சம்பவம் தொடர்பான மேலதிக தகவல்கள் உள்ளவர்கள் 905-579-1520 ext. 5267 என்ற எண்ணை அணுகலாம் அல்லது Crime Stoppers (1-800-222-TIPS) என்ற எண்ணில் அடையாளம் தெரியாமல் தகவல் வழங்கலாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.