டொரொண்டோவில் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு
டொரொண்டோ நகரில் உள்ள ரொஸ் லோர்ட் G. Ross Lord பூங்கா அருகே ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ஞாயிறு காலை 6:10 மணியளவில், பின்ச் அவன்யூ மேற்கு Finch Avenue West மற்றும் டுப்ரெய்ன் வீதி Dufferin Street சந்திப்பில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிசார், அங்கு ஓர் ஆண் காயமடைந்த நிலையில் இருப்பதைக் கண்டுள்ளனர்.
பின்னர் அவர் மருத்துவமனைக்கு அவசரமாக கொண்டு செல்லப்பட்டார்.
காயமடைந்த நபரின் காயம் கடுமையானது என்றாலும், உயிருக்கு ஆபத்தானது அல்ல என மருத்துவமனைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை சந்தேக நபர் குறித்து எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.