வாங்கூவர் விமான நிலையத்தில் வெஸ்ட் ஜெட் விமானத்தில் தீ விபத்து
வெஸ்ட் ஜெட் எயர்லைன்ஸ் விமானமொன்றில் ஏற்பட்ட தீ விபத்தினால் பயணிகள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர்.
விமானத்தின் எஞ்சின் பகுதியில் தீ விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. தனது விமானத்திலிருந்த பயணிகளை வாங்கூவர் சர்வதேச விமான நிலையத்தில் (YVR) அவசரமாக வெளியேற்றியது.
டாம்பா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட இந்த விமானம், ஜூலை 13 இரவு சுமார் 11 மணிக்கு வாங்கூவர் விமான நிலையத்தில் நின்றபோது, அதன் ஒரு எஞ்சினில் தீ பற்றிக் கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
விமான நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாக, விமான பணியாளர்கள் ஸ்டைகளை பயன்படுத்தி, விமானத்தில் இருந்த சுமார் 50 பயணிகளை விரைவாக வெளியேற்ற தீர்மானித்தனர்.
விமானப் பயணிகளுக்கு இதன் போது எந்தக் காயங்களும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. விமானம் பராமரிப்புக்காக சேவையில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலைய தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டிருந்தாலும், விமானத்திற்குள் உள்ள தானியங்கி பாதுகாப்பு முறைதான் அந்த சிறிய தீயை அணைத்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த தீ விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.