கனடாவின் இந்தப் பகுதியில் அறிமுகமாகும் நில அதிர்வு எச்சரிக்கை முறை
கனடாவில் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் நில அதிர்வுகள் குறித்த எச்சரிக்கை முறைமையொன்றை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
இந்த புதிய முறையின் கீழ் மாகாண மக்களுக்கு முன்னறிவிப்புக்கள் விடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
தானியங்கி அடிப்படையில் அலைபேசிகள், வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் ஊடாக நில அதிர்வு தொடர்பில் முன் அறிவிப்புகள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரிய நில அதிர்வுகளை கண்டறிந்து அவை தொடர்பில் இவ்வாறு முன்னெச்சரிக்கை அறிவிப்புக்கள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவின் மத்திய அரசாங்கத்தின் இயற்கை வள மற்றும் சக்தி வளத்துறை அமைச்சர் ஜொனதன் வில்கின்ஸன் இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ளார்.
வலுவான நில அதிர்வுகள் ஏற்பட முன்னதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.
நில அதிர்வு ஏற்படுவதற்கு சில நொடிகளுக்கு முன்னதாக இந்த முன்னெச்சரிக்கையை விடுக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இந்த முன்னெச்சரிக்கை தொடர்பான கால அவகாசம் போதுமானது அல்ல என்ற போதிலும் ஆபத்துக்கு முன்னரான ஒவ்வொரு நொடியும் முக்கியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.