புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மத்தியில் ஜப்பானின் நில அதிர்வு
ஜப்பானின் கிழக்கு நோடா (Noda) பகுதிக்கு அருகில் இன்று 6.0 மெக்னிடியூட் அளவிலான நில அதிர்வு ஒன்று ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
ஜப்பானின் கிழக்கு நோடா கடற்பரப்புக்கு அப்பால் சற்று முன்னர் இந்த நில அதிர்வு உணரப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இது நிலப்பரப்பில் இருந்து சுமார் 19.3 கிலோமீட்டர் (சுமார் 12 மைல்கள்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
மேலும், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்காக மக்கள் தயாராகிக்கொண்டிருந்த வேளையில் இந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், இதன்போது உயிர்ச்சேதங்களோ அல்லது பாரிய சொத்து சேதங்களோ ஏற்பட்டதாக உடனடித் தகவல்கள் வெளியாகவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.