5000த்தையும் தாண்டிய நபர்களை காவு வாங்கிய நிலநடுக்கம்
துருக்கி சிரிய எல்லையை தாக்கிய பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 மடங்காக அதிகரிக்கலாம் என உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரித்துள்ளது.
இதுவரையில் 5000 பேர் உயிரிந்திருக்கலாம் என கணிப்பிடப்பட்டுள்ளதுடன் இரண்டாவது பூகம்பத்தின் பின்னர் உயிரிழப்பு எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்பு
இடிபாடுகளிற்குள் இருந்து மேலும் பல உடல்கள் மீட்கப்படும்போது உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 மடங்காக அதிகரிக்கும் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
பூகம்பங்களில் இது நாங்கள் அவதானிக்கின்ற விடயம் உயிரிழந்தவர்கள் காயமடைந்தவர்கள் குறித்த ஆரம்ப கட்ட எண்ணிக்கை அதற்கு அடுத்த வாரத்தில் பல மடங்காக அதிகரித்து காணப்படும் என உலக சுகாதார ஸ்தாபனத்தின் அவசரநிலைமைக்கான சிரேஸ்ட அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
குளிர் மற்றும் பனி நிலவுவதால் பலர் இருப்பிடம் இன்றி நெருக்கடிக்குள்ளாககூடும் என அவர் தெரிவித்துள்ளார்.