டொராண்டோவில் போராட்டக்காரர்கள் போலீசாரை தாக்கியது: 11 பேர் கைது
டோராண்டோவில் பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய 11 பேர் கைது கனடாவின் டொராண்டோ நகரின் முக்கிய சாலையில் நடைபெற்ற போராட்டம் ஒன்றை கலைக்க முயன்ற பொலிஸாரை சில போராட்டக்காரர்கள் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு தாக்குதல் நடத்தியதாக குற்றம் சுமத்தப்பட்ட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சபாடினா Spadina Avenue மற்றும் ப்ரொன்ட் வீதி Front Street West சந்தியில் நடைபெற்ற போராட்டத்திற்கு பொலிஸார் சென்றுள்ளனர்.
பொலிஸ் உத்தரவு
போராட்டக்காரர்களிடம், சாலையை விட்டுவிட்டு வெளியேறுமாறு பொலிஸார் உத்தரவு வழங்கினர்.
அந்த உத்தரவை போராட்டக்காரர்கள் நிராகரித்து, குறித்த சந்தியை முற்றுகையிட்டதால்தான் பொலிஸார் இந்த போராட்டத்தை சட்டவிரோத ஒன்றுகூடலாக அறிவித்துள்ளனர்.
போராட்டக்காரர்கள் இரண்டாவது முறையாக கலைக்க உத்தரவிடப்பட்டபோது, சிலர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தி, போலீசாரை தாக்கினர் மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டமைக்க முயன்ற பொலிசாரின் நடவடிக்கைகளை எதிர்த்தனர் என போலீசார் தெரிவித்தனர்.
தாக்குதல்களில் பொலிஸார் காயமடைந்தனரா என்பது பற்றிய விபரங்கள் வெளியிடப்படவில்லை.