அமெரிக்காவில் இந்திய வம்சாவளி வைத்தியர் செய்த மோசமான செயல் ; வெளியான அதிர்ச்சி தகவல்
அமெரிக்காவில், அதிக போதை தரும் வலி நிவாரணி மாத்திரைகளுக்கான, 'பிரிப்ஸ்கிரிப்ஷன்' கொடுத்ததாகவும், இதற்கு பிரதிபலனாக பெண்களிடம் பாலியல் உறவுக்கு கட்டாயப்படுத்தியதாகவும் எழுந்த புகாரில், இந்திய வம்சாவளி டாக்டர் கைது செய்யப்பட்டார்.
அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் வசித்து வரும் இந்திய வம்சாவளி வைத்தியர் ஒருவர் மீது போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு, அதிக போதை தரக்கூடிய வலி நிவாரணி மருந்துகள் எழுதி கொடுத்ததாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.
இதற்கு பிரதிபலனாக, சில பெண்களை பாலியல் உறவில் ஈடுபட கட்டாயப்படுத்தியுள்ளார். இவ்வாறு, 2019 முதல் 31,000க்கும் மேற்பட்ட பிரிஸ்கிரிப்ஷன் வழங்கியதாக சமீபத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.
இதைத் தவிர, நோயாளிகளை நேரில் பார்க்காமலேயே சிகிச்சைக்கான பணத்தை இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெற்றுத் தந்து, அமெரிக்க பொது சுகாதார அமைப்பை ஏமாற்றியதாகவும் புகார் எழுந்தது.