கனடாவில் இளம் பெண்களிடையே தற்கொலை விகிதம் அதிகரிப்பு
கனடாவில் இளம் பெண்களிடையே தற்கொலை விகிதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த இருபது ஆண்டுகளில் கனடாவில் தற்கொலை விகிதங்கள் பொதுவாகக் குறைந்தாலும், இளம்பெண்கள் (10–19 வயது) மத்தியில் அந்த விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்று மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இளம் பெண்கள் மத்தியில் தற்கொலை முயற்சி மற்றும் தற்கொலை விகிதம் தொடர்ந்து உயர்ந்து கொண்டே செல்வதாக பாஸ்டன் பல்கலைக்கழக மனநல மருத்துவ உதவி பேராசிரியர் சூங்பின் ஓ தெரிவித்துள்ளார்.
2001 முதல் 2023 வரை கனடாவில் 10–19 வயது பெண் இளையோர்களின் தற்கொலை விகிதம் ஆண்டுக்கு சுமார் 2% அதிகரித்துள்ளது. அதே வயதுக்குழுவில் உள்ள சிறுவர்களின் விகிதம் ஆண்டுக்கு சுமார் 1% குறைந்துள்ளது.
ஒப்பீட்டளவில், அமெரிக்காவில் அதே காலகட்டத்தில் இளம்பெண்களின் தற்கொலை விகிதம் 3.4% வரை உயர்ந்தது, ஆனால் 2017க்குப் பிறகு குறையத் தொடங்கியது.
தென் கொரியாவில் 2015–2023 இடையே இளம்பெண்களின் தற்கொலை விகிதம் 11% வரை அதிகரித்துள்ளது.சிறுவர்களிடமும் வருடத்திற்கு 5% உயர்வு பதிவாகியுள்ளது.
உடல் தோற்ற அழுத்தம் போன்றவை, ஆன்லைன் துன்புறுத்தல் (Cyberbullying), மற்றும் இளம்பெண்களுக்கு உரிய மனநல பராமரிப்பு குறைபாடு ஆகியவை முக்கிய காரணிகள் எனக் கருதப்படுகின்றன.