கனடா மற்றும் அமெரிக்க பொருளாதாரம் குறித்து எச்சரிக்கை
கனடா மற்றும் அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலை நோக்கி நகர்வதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடா வங்கி முன்னாள் ஆளுநர் ஸ்டீபன் போலோஸ், வர்த்தக வரிகள், புவிசார் பதற்றங்கள் மற்றும் பொருளாதார அச்சங்கள் காரணமாக, கனடாவும் அமெரிக்காவும் பொருளாதார மந்தநிலைக்கு (Recession) செல்லும் அபாயம் உள்ளது என்று எச்சரித்துள்ளார்.
இரு நாடுகளின் பொருளாதார பாதை நல்லதல்ல. இன்னும் மந்தநிலை வரவில்லை என்றாலும் அதற்குத் திசை திரும்பி வருகிறது என அவர் கூறியுள்ளார்.
கனடாவில் வேலைவாய்ப்பு சந்தையில் மந்தம் தெளிவாகத் தெரிகிறது என்று போலோஸ் தெரிவித்துள்ளார்.
2025 ஆகஸ்ட் மாதத்தில் வேலை இழந்தோர் 66,000 ஆக உயர்ந்ததுள்ளது. வேலைஇல்லாதோரின் விகிதம் 7.1% ஆக அதிகரித்துள்ளது.
இளைஞர் வேலைஇல்லாதோரின் விகிதம் 14.5%, தேசிய சராசரியின் இரட்டிப்பு என்பது குறிப்பிடத்தக்கது.
செயற்கை நுண்ணறிவு (AI) வேலைவாய்ப்பு சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக சுட்டிக்காட்டினார்.