போலந்து மற்றும் உக்ரைனுக்கு முழு ஆதரவு வழங்கப்படும்
போலந்து மற்றும் உக்ரைனுக்கு கனடா முழு ஆதரவு வழங்கப்படும் என கனடா வெளிநாட்டு அமைச்சர் அனிதா ஆனந்த் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் ட்ரோன்கள் நாட்டு (NATO) வான்வெளியை மீறியதை அடுத்து அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
பல ரஷ்ய ட்ரோன்கள் இரவொன்றில் பல மணி நேரம் அதன் வான்வெளிக்குள் நுழைந்ததாகவும், அவை நேட்டோ படையின் உதவியுடன் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் போலந்து அறிவித்துள்ளது.
உக்ரைன் போரைக் கைவிட வேண்டும்
இது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் சமாதானத்தை நிராகரிபப்தற்கான இன்னொரு கொடிய உதாரணம் என அனிதா ஆனந்த் சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கனடா மீண்டும் ரஷ்யா தனது “அநியாயமான, சட்டவிரோதமான” உக்ரைன் போரைக் கைவிட வேண்டும் எனக் கோரியுள்ளது.
ரஷ்யா பதற்றத்தை தூண்டும் வகையில் இந்த ட்ரோன் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக ஐரோப்பிய தலைவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதேவேளை, போலந்து மீது தாக்குதல்கள் எதுவும் நடத்தப்படவில்லை என ரஷ்யா மறுப்பு வெளியிட்டுள்ளது.