இந்தோனேஷியாவை அதிரவைத்த நிலநடுக்கம்; 44பேர் பலி 300 பேர் காயம்
இந்தோனேஷியாவின் ஜாவா தீவுகளில் 5.6 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 44 பேர் உயிரிழந்துள்ளதுடன் 300 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த அனர்த்தத்தினால் பாடசாலைகள், உள்ளிட்ட பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. இன்று தலைநகர் ஜக்கர்த்தாவில் 5.6 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு அது சில வினாடிகளுக்கு நீடித்தது.
எனினும் சுனாமி ஏற்படும் அபாயம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள அதேவேளை நிலநடுக்கத்தைத் தொடர்ந்து பின்னதிர்வுகள் ஏற்படலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் உள்புறங்களில் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டனர்.