ஈஸ்ட் யோர்க்கில் சிறுமியை பின்தொடர்ந்த மர்ம மனிதர்..!
ஈஸ்ட் யோர்க்கில் ஒரு சிறுமியை காரில் வந்த ஒருவர் பின்தொடர்ந்ததை அடுத்துத் தாங்கள் அது குறித்துப் பொதுமக்களை எச்சரிப்பதாக ரொறொன்ரோ காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
Barrington Avenue மற்றும் Balfour Avenue பகுதியில் சந்தேகத்திற்கிடமான சம்பவம் குறித்த அழைப்பு வந்ததாக காவல்துறையினர் கூறுகின்றனர். 12 வயதிற்கு உட்பட்ட ஒரு சிறுமி அந்தப் பகுதியில் நடந்து சென்றதாகவும், அவரைத் தொடர்ந்து காரில் ஒருவர் வந்ததாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த மனிதர் சிறுமியை முகமூடியுடன் தனது காரில் கவர்ந்திழுக்க முயன்றதாக கூறப்படுகிறது. சிறுமி, தனது பாதுகாப்பிற்குப் பயந்து வீட்டிற்கு ஓடினாள்.
அந்த மனிதரை அதிக வயதுடையவர் என்று காவல்துறையினர் விவரிக்கிறார்கள். மேலும் தகவல்களைக் கொண்ட எவரையும் 416-808-5500 என்ற எண்ணிலோ அல்லது குற்றத் தடுப்பாளர்களை அநாமதேயமாக 416-222-8477 என்ற எண்ணிலோ தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறார்கள்.