பிரித்தானிய பறந்த விமானம் காற்று கொந்தளிப்பில் சிக்கியதில் 2 பேர் காயம்
பிரித்தானியா நோக்கிப் பறந்த விமானமொன்று காற்று கொந்தளிப்பில் சிக்கியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.
கிரேக்கத் தீவுகளில் ஒன்றான கோர்புவிலிருந்து லண்டன் நோக்கி பயணம் செய்த விமானம் ஒன்று காற்று கொந்தளிப்பு காரணமாக அவசரமாக இத்தாலியின் ரோம் நகரில் தரையிறக்கப்பட்டது.
ஈசி ஜெட் விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான 8210 ரக விமானமே இவ்வாறு காற்று கொந்தளிப்பில் சிக்கி உள்ளது. இத்தாலிய வான் பரப்பில் வைத்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.
இந்த காற்று கொந்தளிப்பு சம்பவத்தில் இரண்டு விமான பணியாளர்கள் காயமடைந்துள்ளனர்.
காற்றுக் கொத்தெளிப்பினால் பாதிக்கப்பட்ட பயணிகளை அழைத்து வருவதற்காக வேறு ஒரு விமானம் ரோமிற்கு அனுப்பி வைக்கப்பட்டதுடன், விபத்து இடம்பெற்ற அதே நாளில் பயணிகள் பிரித்தானியாவுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.
விமானம் காற்றுக் கொந்தளிப்பில் சிக்கிய போது இருக்கை பட்டி அணியுமாறு அறிவிக்கப்பட்டதாகவும் பயணிகள் எவரும் இந்த சம்பவத்தில் காயமடையவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.
கொபுவிலிருந்து இருந்து லண்டன் நோக்கிய பயணம் செய்த விமானம் ஒன்று காற்றுக் கொந்தளிப்பில் சிக்கியதாகவும் இதன் போது இரண்டு விமான பணியாளர்கள் காயமடைந்ததாகவும் ஈசி ஜெட் விமான சேவை நிறுவனம் ஊடக அறிக்கை மூலம் அறிவித்துள்ளது.
பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பு கருத்தில் கொண்டு விமானம் உடனடியாக திசை திருப்பப்பட்டது என தெரிவிக்கப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்த பணியாளர்களின் நிலை குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
காலநிலை மாற்றம் காரணமாக அண்மைய நாட்களாக இவ்வாறு காற்று கொந்தளிப்பில் சிக்கி விமானங்கள் விபத்துக்குள்ளாகும் சந்தர்ப்பங்கள் அதிகரித்துள்ளன.