கனடாவின் தொழிற்சந்தை குறித்து வெளியான தகவல்
கனடாவின் தொழிற்சந்தை தொடர்பில் புதிய தகவல்களை அந்நாட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் கனடாவின் வேலைவாய்ப்பு சந்தை எதிர்பாராத வகையில் வலுப்பெற்றுள்ளதாக ஜூலை 5 அன்று வெளியான அறிக்கை தெரிவிக்கப்படுகின்றது.
நாட்டின் வேலையற்றோர் எண்ணிக்கை 0.1 வீதத்தினால் குறைந்து, 6.9% ஆக மாறியுள்ளது.
83,000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன, அதில் பெரும்பாலானவை பகுதி நேர பணியாளர்களுக்கானதாக இருந்தது.
தனியார் துறையில் மட்டும் 47,000 வேலை வாய்ப்புக்கள் உருவாகியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொதுவாகவே வேலையற்றோர் வீதம் 7.1% ஆக உயரும் என எதிர்பார்த்திருந்த நிலையில், ஜூன் மாத இக்கணக்குகள் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஜனவரி மாதத்திற்குப் பிறகு இது முதல்முறையாக பெரிய அளவில் வேலைவாய்ப்பு வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக வேலைவாய்ப்பு விகிதம் தொடர்ந்து உயர்ந்திருந்த நிலையில் இம்முறை அந்த நிலை மாற்றமடைந்துள்ளது.