அடுத்தடுத்து உயிரை மாய்த்துக்கொள்ளும் காசா போரில் ஈடுபட்ட இஸ்ரேலிய வீரர்கள்
காசா போரில் ஈடுபடுத்தப்பட்ட இஸ்ரேலிய ராணுவ வீரர்கள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டிருக்கின்றனர்.
நேற்றைய தினம் மற்றொரு இஸ்ரேலிய ராணுவ வீரர் தன்னைதானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். தெற்கு இஸ்ரேலில் உள்ள Sde Teiman ராணுவ தளத்தில் இந்த சம்பவம் நடந்திருக்கிறது.
21 வீரர்கள் தற்கொலை
இவரின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் கடந்த மாதம் காசாவில் நடந்த குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார். சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு இவருக்கு எதிராக விசாரணை தொடங்கப்பட்டது.
இவரது தளபதிகள் அவரது ஆயுதத்தை பறிமுதல் செய்ய முடிவு செய்தனர். இவரிடம் எந்த ஆயுதமும் இல்லாமல் இருந்தது. கோலானி பிரிகேட்டின் உறுப்பினரான இந்த வீரர், ராணுவ காவல்துறையினரால் விசாரிக்கப்பட்ட பின்னர் தற்கொலை செய்து கொண்டார்.
தூங்கிக்கொண்டிருந்த மற்றொரு வீரரின் துப்பாக்கியை எடுத்து தன்னை தானே சுட்டுக்கொண்டார்.
இஸ்ரேல் ஹயோம் செய்தித்தாளின் புள்ளிவிவரங்களின்படி, 2024 ஆம் ஆண்டில் 21 வீரர்கள் தற்கொலை செய்துக்கொண்டனர் என்பதும் குறிப்பிடதக்கது.