லாட்வியாவில் பணியில் இருந்த கனடிய படை அதிகாரி மரணம்
லாட்வியாவில் பணியில் இருந்த கனடிய ஆயுதப் படை உறுப்பினர் ஒருவர் மரணமடைந்துள்ளார்.
வாரண்ட் ஆபிசர் ஜார்ஜ் ஹோல் என்ற படைவீரர் கடந்த செவ்வாய்க்கிழமை காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருந்தார்.
கடந்த வெள்ளிக்கிழமை அவர் மரணமடைந்ததாக தேசிய பாதுகாப்புத்துறை மற்றும் கனடிய ஆயுதப் படைகள் வெளியிட்ட அறிவிப்பில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கனடிய இராணுவ போலீசார் லாட்விய அதிகாரிகளுடன் இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்போது அவரது மரணம், அங்குள்ள மற்ற படைவீரர்களின் பாதுகாப்புக்கு எந்தவித அச்சுறுத்தலாகவும் இல்லை எனவும் படைகள் தெரிவித்துள்ளன.
இருபது ஆண்டுகள் இராணுவ சேவையில் ஈடுபட்டிருந்த அவர், அனுபவம் மிக்க அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.
ஹோலின் மரணத்திற்கான சூழ்நிலைகள் தொடர்பான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.