பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடனமாடிய 97 வயது முதியவர் திடீர் மரணம்
அமெரிக்காவில் தனது 97ஆவது பிறந்தநாளை மிகவும் உற்சாகமாகக் கொண்டாடிய முதியவர் ஒருவர், நடனமாடி முடித்த சில நிமிடங்களிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் நெகிழ்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவைச் சேர்ந்த 'விடோ' என்ற 97 வயது முதியவர், தனது பிறந்தநாளை அயல் வீட்டாருடன் இணைந்து உற்சாகமாகக் கொண்டாடியுள்ளார்.

விழாவின் போது, புகழ்பெற்ற 'Stayin alive' (உயிருடன் இருப்போம்) என்ற பாடலுக்கு அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் நடனமாடியுள்ளார்.
அதைத் தொடர்ந்து அனைவரும் இணைந்து 'Happy Birthday' பாடி முடித்த சில நிமிடங்களிலேயே, எதிர்பாராதவிதமாக அவரது உயிர் பிரிந்தது.
தனது கடைசி தருணங்கள் வரை மிகவும் சந்தோஷமாக, பிறருடன் இணைந்து கொண்டாட்டத்துடன் வாழ்ந்து மறைந்த இவரின் காணொளி மற்றும் செய்தி தற்போது சமூக வலைதளங்களில் பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.