மொன்ரியலில் இடம்பெற்ற விபத்தில் 80 வயது பெண் பலி
கனடாவின் மொன்ரியல் நகரின் செயிண்ட் லியோனார்ட் பகுதியில், சனிக்கிழமை இரவு வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார் தூணில் மோதி ஏற்பட்ட விபத்தில், 80 வயதான ஒரு மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.
மாலை 7:15 மணியளவில் லாகோர்டேர் புல்வது மற்றும் ஜாரி தெருவில் இடம்பெற்ற விபத்து குறித்து அவசர அழைப்பு ஒன்று பதிவு செய்யப்பட்டதாக மொன்ரியல் காவல் துறை தெரிவித்துள்ளது.
பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த போது, காரில் சலனமற்றிருந்த மூதாட்டியை வெளியே எடுத்து உயிர் காப்பு முதலுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
குறித்த மூதாட்டி கடுமையான காயங்களுடன் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தார், ஆனால் துரதிருஷ்டவசமாக அந்த காயங்களால் இறந்துவிட்டார்" என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்த பெண் வடக்கு திசையில், லாகோர்டேர் புல்வதில்வேகமாக செல்கையில், திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் மின் கம்பத்தில் மோதி விபத்துக்குள்ளாயிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
விபத்துக்கான காரணங்கள் மற்றும் சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்த, பல்வேறு கோணங்களில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
காவல்துறை, இந்த விபத்தில் மதுபானம் காரணமாக இருக்க வாய்ப்பில்லை என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் வேறு எவரும் காயமடையவில்லை என்றும், சம்பவம் தொடர்பான விசாரணை தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.