இலங்கையில் ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்து பஸ் விபத்து 15 பேர் பலி
இலங்கையில் பஸ் ஒன்று சுமார் ஆயிரம் அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
எல்ல–வெல்லவாய பிரதான வீதியில் நேற்று இரவு இந்த விபத்துள்ளது. தங்காலை நகரசபை பணியாளர்கள் சுற்றுலா சென்றே பஸ் ஒன்றே இவ்வாறு பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
உயிரிழந்தவர்களில் பேருந்து சாரதி மற்றும் ஒன்பது பெண்களும் உள்ளடங்குவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தங்காலை நகரசபை ஊழியர்கள் சுமார் 30 பேர் கொண்ட குழு இந்த பஸ்ஸில் பயணித்துள்ளது. பஸ் எதிரே வந்த ஜீப்புடன் மோதியதுடன், வீதி பாதுகாப்பு வேலியையும் இடித்துச் சென்றுள்ளது.
இதில் ஆறு ஆண்கள், ஐந்து பெண்கள் மற்றும் ஐந்து சிறுவர் உள்பட 18 பேர் படுகாயமடைந்து பதுளை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் சிலர் மிகக் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, மீட்பு பணிகளில் ஈடுபட்ட இரண்டு பொதுமக்களும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயர்வடையக் கூடும் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.