புது பிஸ்னஸ் தொடங்கிய எலான் மஸ்க்! அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே இவ்வளவா?
டெஸ்லா வாகனங்கள், ஸ்பேஸ் எக்ஸ் விண்வெளி நிறுவனம் என பல வழிகளில் வருமானம் ஈட்டி உலக அளவில் நம்பர் ஒன் பணக்காரராக திகழும் எலான் மஸ்க் (Elon Musk), தற்போது தனது அடுத்த வணிகப் பயணத்தை இன்று அதிகாரப்பூர்வமாக துவக்கியுள்ளார்.
இந்த முறை புதிய வாசனை திரவியம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார் எலான் மஸ்க் (Elon Musk) . தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த வாசனைத் திரவியத்தை அறிமுகப்படுத்தியுள்ளார்.
இந்த திரவியத்திற்கு எரிந்த முடி (பர்ன்ட் ஹேர் – Burnt Hair) என எலான் மஸ்க் (Elon Musk), பெயரிட்டுள்ளார்.
“பூமியின் சிறந்த வாசனை”
அத்துடன் “பூமியின் சிறந்த வாசனை” என்று தனது இந்த வாசனை திரவியம் குறித்து தனி பதிவை வெளியிட்டுள்ளார். தன்னைப் போன்றவர்கள் வாசனைத் திரவிய தொழிலில் இறங்குவது தவிர்க்க முடியாதது என்று ட்விட்டரில் எலான் மஸ்க்(Elon Musk) பதிவிட்டுள்ளார்.
அதேவேளை ட்விட்டரில் வாசனை திரவியத்தை அறிமுகப்படுத்திய சில நிமிடங்களிலேயே 10 ஆயிரம் பாட்டில்கள் விற்று தீர்ந்துவிட்டதாக எலான் மஸ்க் (Elon Musk) அறிவிப்பை வெளியிட்டார்.
எலான் மஸ்க் அறிமுகப்படுத்திய இந்த வாசனைத் திரவியம் அடங்கிய ஒரு பாட்டிலின் விலை 100 டாலர்கள். மேலும் தனது ட்விட்டர் பயோவை “வாசனை திரவிய விற்பனையாளன் (Perfume Salesman)” என்று மாற்றி விட்டார் எலான் மஸ்க்.
மேலும் இந்த வாசனை திரவியத்தை கிரிப்டோ கரன்சியை பயன்படுத்தியும் வாங்கலாம் என்று மஸ்க் (Elon Musk)தெரிவித்துள்ளார்.