உலகின் முதல் ட்ரில்லியனரான எலான் மஸ்க்
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்டதைத் தொடர்ந்து அதன் உரிமையாளரான இலான் மஸ்க், உலகின் முதல் டிரில்லியனர் என்ற சாதனையை படைத்துள்ளார்
எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளரான எலான் மஸ்க், ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.

இந்த நிறுவனம் தற்போது பங்குச் சந்தைக்குள் களமிறங்கியுள்ளது. குறித்த ஐபிஓ, எலான் மஸ்க்கை முதல் டிரில்லியனர் என்ற சாதனைக்கு சொந்தக்காரராக மாற்றியுள்ளது.
ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் பங்குகள் பொதுப் பங்குச் சந்தையில் விற்பனைக்கு வந்தன.
அவை உடனடியாக தலா சுமார் 150 டொலர் (112 பவுண்டுகள்) வீதம் விற்பனையாகின. அதன் பிறகு, பங்கின் விலை வேகமாக 160 டொலர் வரை உயர்ந்ததுடன், தொடர்ந்து மேலும் அதிகரிக்கும் அறிகுறிகளையும் காட்டியது.
வியாழக்கிழமையன்று ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் கணித்திருந்த 135 டொலர் ஆரம்பப் பட்டியல் விலையை (Estimated listing price) விட, தற்போது 160 டொலர் என்ற அளவில் அதன் பங்குகள் 18% கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.