ரஷ்ய அதிபர் புடினுக்கு சவால் விடுத்த எலோன் மஸ்க்
ரஷ்ய அதிபர் புடினுக்கு சவால் விடுத்து தனது சமூக வலைதளத்தில் எலோன் மஸ்க்(Elon Musk) பதிவிட்டுள்ளார்.
அமெரிக்க மின்சார வாகன உற்பத்தி நிறுவனமான டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியும், விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸின் நிறுவனருமான எலோன் மஸ்க்(Elon Musk), ரஷ்ய ராணுவத் தாக்குதல்களால் பாதிக்கப்பட்ட உக்ரைனில் ஸ்டார்லிங்க் இணையச் சேவையை செயல்படுத்துதல் மற்றும் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இணைப்பைக் கொண்டுவர உதவும் உபகரணங்களை அனுப்பி வைத்தார்.
இந்நிலையில், எலோன் மஸ்க்(Elon Musk) , நேற்று ரஷிய அதிபர் விளாடிமிர் புடினு(Vladimir Putin)க்கு சவால் ஒன்று விடுத்துள்ளார்.
மேலும் இதுகுறித்து ரஷ்யாவின் உக்ரைன் மீதான கொடூரமான தாக்குதலைத் தொடர்ந்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் ரஷ்ய மொழியில், "இதன் மூலம் நான் விளாடிமிர் புடினு(Vladimir Putin)க்கு ஒரு ஒற்றைப் போருக்கு சவால் விடுகிறேன்.
இந்த சண்டையை ஏற்றுக்கொள்கிறாரா" என்று டுவிட் செய்துள்ளார்.
இந்த டுவீட் குறித்து ரஷ்ய தரப்பில் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை.