கோவிட் தொடர்பில் கருத்துக்கள் தெரிவித்ததற்காக சிக்கலுக்காளான பெண் மருத்துவர்: எலான் மஸ்கின் பேருதவி
கோவிட் குறித்த தனது கருத்துகளுக்காக கனடா அரசால் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, விசாரணைக்குட்படுத்தப்பட்ட பெண் மருத்துவர் ஒருவருக்கு, எலான் மஸ்கின் எக்ஸ் தளம் உதவிக்கரம் நீட்டியுள்ளது.
கனடாவில் நோயெதிர்ப்பு சக்தி துறையில் மருத்துவராகப் பணியாற்றிவருபவர், Dr. குல்விந்தர் கௌர் கில் (Dr. Kulvinder Kaur Gill). நோயாளிகள் மீது மருத்துவ பரிசோதனைகள் முதலான எந்த விடயத்தையும் திணிக்கக்கூடாது, நோயாளியின் ஒப்புதலுடனேயே அவருக்கான சிகிச்சைவரை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கொள்கை உடையவரான Dr. கில், 2020ஆம் ஆண்டு, கனடா அரசு பொதுமுடக்கம் அறிவித்தபோது, அதை கடுமையாக எதிர்த்தவர் ஆவார். பொதுமுடக்கங்கள், மோசமான சரிசெய்ய இயலாத தாக்கத்தை ஏற்படுத்திவிடும் என வெளிப்படையாக முதன்முதலில் சமூக ஊடகங்களில் கருத்துக்கள் தெரிவித்தவர் Dr. கில்.
உடனடியாக அவருக்கெதிராக புகார்கள் குவிய, நான்கு ஆண்டுகளாக கனடா அரசின் நடவடிக்கைகளால் கடும் அவஸ்தையை அவர் எதிர்கொள்ள நேர்ந்தது. அதை எதிர்த்து நீதிமன்றம் சென்றார் Dr. கில். ஆனால், நீதிமன்றமும் அவருக்கு எதிராக தீர்ப்பளித்தது. அவர் 300,000 டொலர்கள் செலுத்தவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட, கடும் மன உளைச்சலுக்கு ஆளானார் Dr. கில்.
Hi @elonmusk @X—as one of the first??MDs to oppose lockdowns on twitter in 2020, in a socialized healthcare system where govt is sole-payer, I've been persecuted for 4yrs solely d/t my tweets. Pls help a fellow Cdn! ~$300K in court-ordered costs due in 4d:https://t.co/b0cc5pZIBk https://t.co/kpD3FzgnNK pic.twitter.com/nNSKGda1D0
— Kulvinder Kaur MD (@dockaurG) March 21, 2024
இந்த மாதம், அதாவது, மார்ச் மாத இறுதிக்குள், Dr. கில் 300,000 டொலர்கள் செலுத்தவேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ட்விட்டர் அல்லது எக்ஸ் தளத்தில் தனது கருத்துக்களை பதிவிட்டுவந்த Dr. கில், எக்ஸ் தளத்தின் உரிமையாளரான எலான் மஸ்கிடமே உதவி கோரினார்.
உடனடியாக, எக்ஸ் தளம், Dr. கில்லைத் தொடர்புகொண்டு அவருக்கு நிதியுதவி செய்வதாக உறுதியளித்துள்ளது. ஏற்கனவே, Dr. கில் சட்ட செலவுகளுக்காக நிதி திரட்டிவரும் நிலையில், Dr. கில் செலுத்தவேண்டிய 300,000 டொலர்களில் இன்னும் அவருக்கு எவ்வளவு பணம் தேவையோ, அதைக் கொடுக்க இருப்பதாக எக்ஸ் தளம் அறிவித்துள்ளது.
X is proud to help defend Dr. Kulvinder Kaur Gill against the government-supported efforts to cancel her speech.@dockaurG is a practicing physician in Canada, specializing in immunology and pediatrics. Because she spoke out publicly on Twitter (now X) in opposition to the… https://t.co/IujDSeBGBN
— News (@XNews) March 24, 2024
இந்த விடயத்தையும் எக்ஸ் தளத்திலேயே உறுதி செய்துள்ள Dr. கில், எக்ஸ் தளத்துக்கும், தனக்கு உதவி வரும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டுள்ளார்.
எக்ஸ் தளத்தில் கருத்துக்களை பதிவிடுவதன் காரணமாக யாராவது அநியாயமாக நடத்தப்பட்டால், அது குறித்து எங்களுக்குத் தெரியப்படுத்தினால், நாங்கள் உங்களுக்கான சட்டச் செலவுக்கு உதவுவோம் என எலான் மஸ்க் ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.