அமெரிக்காவின் முக்கிய நிறுவனத்தில் இருந்து எலான் மஸ்க் ராஜினாமா
எலான் மஸ்க்(Elon Musk) எண்டெவரின் இயக்குநர்கள் குழுவிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
எண்டெவர் குரூப் நிறுவனம் ஊடக நிறுவனம் மற்றும் அது சார்ந்த திறமை அலுவலகங்களைக் கொண்ட அமெரிக்க நிறுவனமாகும்.
இந்த நிறுவனத்தில் இயக்குனர்கள் குழுவில் டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க்(Elon Musk) கும் ஒருவராக இருந்தார்.
இந்த நிலையில் எலான் மஸ்க் (Elon Musk) எண்டெவரின் இயக்குநர்கள் குழுவிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் "எங்கள் நிறுவனத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய எலான் மஸ்க் (Elon Musk) அவர்களுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம்.
எங்களின் நீண்ட கால உத்தி மற்றும் எதிர்கால விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கிற்கான பார்வைக்கு அவர் அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கினார்.
அவருக்கு நிறைய கோரிக்கைகள் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம். மேலும் அவர் எங்களுக்கு வழங்கிய ஆதரவை நாங்கள் பாராட்டுகிறோம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.