நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? எலான் மஸ்க் பதிவால் சூடான டுவிட்டர்
உலகின் பெரும் பணக்காரரான எலான் மாஸ்க், தன்னுடைய பணியை விட்டு விலகப்போவது குறித்து யோசிப்பதாக டுவிட் செய்துள்ளார்.
எலான் மாஸ்க்கை டுவிட்டரில் சுமார் 65 மில்லியன் மக்கள் பின்தொடர்கின்றனர், அவரது ஒரே ஒரு டுவிட் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது.
இந்நிலையில் சமீபத்தில் அவர் பதிவிட்ட டுவிட்டுக்கு கமெண்டுகள் வந்து கொண்டிருக்கின்றன, அதாவது, `என் பணிகளில் இருந்து முழுவதுமாக விலகிவிட்டு, முழு நேர influence ஆகலாம் என்று நினைக்கிறேன்.. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?’ என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் எலான் மஸ்க்.
இதைப்பார்த்த `மிஸ்டர் பீஸ்ட்;’ என்ற யூட்யூப் பிரபலம் தான் எலான் மஸ்கிடம் `எப்படி யூட்யூப் பார்வைகளைப் பெறுவது’ என்று தான் கற்றுத் தருவதாகக் கூற, எலான் மஸ்க் அதற்கு கைகூப்பிய எமோஜியைப் பதிலாகப் பதிவிட்டுள்ளார்.
கடந்த வாரம், தனக்குத் தானே `மொஹாக்’ ஹேர்ஸ்டைலில் முடி வெட்டிக் கொண்டு எலான் மஸ்க் பதிவிட்ட படம் வைரலாகப் பரவியது குறிப்பிடத்தக்கது.
thinking of quitting my jobs & becoming an influencer full-time wdyt
— Elon Musk (@elonmusk) December 10, 2021