சொந்த வீட்டை விற்கும் எலான் மஸ்க்! இத்தனை மில்லியன் டொலரா?
உலகப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க், கலிபோர்னியாவில் உள்ள மாளிகையை விற்க திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 16,000 சதுர அடி நிலப்பரப்பில் அமைந்துள்ள அந்த மாளிகையில், ஏழு படுக்கை அறைகளும் 10 குளியல் அறைகளும் உள்ளன.
கடந்த 1916ஆம் ஆண்டு கட்டப்பட்ட அந்த வீட்டில், நூலகம், இசை அறை, முழுமையாக மாற்றியமைக்கப்பட்ட சமையலறை, நீச்சல் குளங்கள் ஆகியவை உள்ளன.
இந்த மாளிகையின் தற்போதைய விலை 31.99 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக ஜூன் மாதம், அவர் ட்விட்டர் பக்கத்தில், "சொந்தமாக உள்ள கடைசி வீட்டை விற்க முடிவு எடுத்துள்ளேன். பெரிய குடும்பத்திற்குதான் அந்த வீடு செல்ல வேண்டும். அது ஒரு சிறப்பான இடம்" என பதிவிட்டிருந்தார்.
இதே போன்று டெஸ்லாவின் தலைமையகத்தை சிலிக்கான் வேலியிலிருந்து டெக்ஸாஸ் மாகாணத்திற்கு மாற்றவுள்ளதாகவும் எலான் மஸ்க் அறிவித்ததும் குறிப்பிடத்தக்கது.