நியூயார்க் மக்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ள விடயம்
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ராக்லந்து பகுதியில் Polio எனும் இளம்பிள்ளைவாதச் சம்பவம் உறுதியானதை அடுத்து அதற்கு எதிராகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட முதல் இளம்பிள்ளைவாதச் சம்பவம் இது என கூறப்படுகின்றது. அத்துடன் நியூயார்க் ராக்லந்து பகுதியில் இளம்பிள்ளைவாதத் தடுப்பூசி இலவசமாகவும் வழங்கப்படுகிறது.
கழிவுநீர் மாதிரிகளிலும் கிருமி
நியூயார்க் நகரச் சாக்கடைப் பகுதியிலும் ராக்லந்து பகுதியின் கழிவுநீர் மாதிரிகளிலும் இளம்பிள்ளைவாதக் கிருமி கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மீண்டும் அங்கு இளம்பிள்ளைவாதக் கிருமி பரவலாம் என்ற அச்சம் அதிகரித்துள்ளது.
அதேவேளை இளம்பிள்ளைவாதம் பொதுவாக 5 வயதுக்குக்கீழ் உள்ள பிள்ளைகளைப் பாதிக்கும் என கூறப்படும் நிலையில், அதற்கு எதிராகத் தடுப்பூசி போடாத பெரியவர்களையும் அது கடுமையாகப் பாதிக்கலாம் எனவும் தெரிவிக்கபடுகின்றது.
அத்துடன் அது மனிதர்களிடையே எளிதில் பரவக்கூடியது என்பதுடன் , அது நரம்பு மண்டலத்தைத் தாக்கி உடல் செயலிழந்து மரணங்கூட ஏற்படலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது..