கனடாவில் துப்புரவு பணியாளருக்கு கிட்டிய அதிர்ஸ்டம்
கனடாவின் கியுபெக் மாகாணத்தில் வசிக்கும் க்ளாட் புச்சர் என்ற துப்புரவுப் பணியாளர், ஆகஸ்ட் 27 அன்று நடைபெற்ற லொட்டோ சீட்டிலுப்பில் 46 மில்லியன் டாலர் ஜாக்பாட்டை வென்று அதிர்ஷ்டசாலியாகியுள்ளார்.
புச்சர், தனது வழக்கமான எண்களை பயன்படுத்தி ஆன்லைனில் டிக்கெட் வாங்கியிருந்தார்.
மின்னஞ்சல் மூலம் தான் வெற்றியாளர் என்பதை அறிந்தபோது, “முதலில் $46,000 என்று நினைத்தேன். ஆனால் பூஜ்யங்களை எண்ணியபோது அது $46,000,000 என்று புரிந்தது” எனக் கூறியுள்ளார்.
இந்த மாதத்தில் மூன்றாவது பெரிய வெற்றி இதுவெனவும், மாகாணம் முழுவதும் 2024ஆம் ஆண்டில் மட்டும் $1.8 பில்லியன் பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளதாகவும் லொட்டோ கியுபகெ் நிறுவனத்தின் துணைத் தலைவர், தெரிவித்தார்.
புச்சர், விரைவில் ஓய்வு பெற்று தனது மனைவியுடன் 1980களில் வாழ்ந்த சுவிட்சர்லாந்துக்கு திரும்பிச் செல்லவும், குடும்பத்தினருக்காக உதவிகள் செய்யவும் விருப்பம் தெரிவித்துள்ளார்.