ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் சிதைந்த எரிசக்தி கட்டமைப்பு!
உக்ரேனில் எரிசக்திக் கட்டமைப்பு ரஷ்யாவின் ஏவுகணைத் தாக்குதலால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குளிர்காலம் நெருங்கும் வேளையில், தலைநகர் கீவ் முழுதும் மின்தடை ஏற்படக்கூடுமென அஞ்சப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் நாடெங்கிலும் மின்-விநியோகத்தை வழக்கநிலைக்குக் கொண்டுவர அவர்கள் முயன்றுவருகின்றனர்.
அதேவேளை கடந்த மாதத்திலிருந்து உக்ரேனின் உள்கட்டமைப்பு மீது ரஷ்யா மோசமான தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன.
குடிநீருக்கும் மின்-விநியோகத்துக்கும் பற்றாக்குறை நிலவுவதால் அங்கு மனிதாபிமானப் பேரிடர் ஏற்பட்டுள்ளதாய் ஐக்கிய நாட்டு நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதேவேளை 44 மில்லியன் பேர் வசிக்கிக்கும் உக்ரைனில், சுமார் 10 மில்லியன் பேருக்கு மின்சாரச் சேவை இல்லை என அந்நாட்டு அதிபர் வொலோடமிர் ஸெலென்ஸ்கி (Volodymyr Zelenskyy) கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.