ஆர்ஜென்டினா அணியிடம் தோற்ற இங்கிலாந்து ; இளவரசர் வில்லியம் கவலை
ஆர்ஜென்டினா அணியிடம் இங்கிலாந்து அணி 2-1 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்து உலகக் கிண்ணத்தில் இருந்து வெளியேறியமை குறித்து, இளவரசர் வில்லியம் மற்றும் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆகியோர் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
கென்சிங்டன் அரண்மனை ஊடாக இளவரசர் வில்லியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தத் தோல்வி மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் போட்டித் தொடரில் இங்கிலாந்து அணி வெளிப்படுத்திய போராட்ட குணமும் நம்பிக்கையும் அனைவரையும் ஊக்கப்படுத்தியது என்றும் இளவரசர் வில்லியம் குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார். "இங்கிலாந்து அணியின் தோல்வி மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும், அணியினர் வெளிப்படுத்திய ஆர்வமும், ஆற்றலும் அனைவரையும் பெருமைப்பட வைத்துள்ளது" என்று அவர் கூறியுள்ளார்.