தேர்தலில் வாக்களிக்கும் வயதை குறைக்கும் இங்கிலாந்து!
இங்கிலாந்து முழுவதும் 16 வயது முதலே வாக்காளர்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்கும் உரிமையைப் பெற உள்ளனர்.
இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய தேர்தல் சட்டம் மூலம், குடிமக்கள் பொதுத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெறுவதற்கான வயதை 18-ல் இருந்து 16 ஆக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், இங்கிலாந்தில் நடைபெறும் தேர்தல்களில் வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டை தடுக்கும் வகையில், தேர்தல் நன்கொடை தொடர்பான விதிகளை கடுமையாக்கவும் இங்கிலாந்து அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அதேவேளை ஏற்கனவே ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸில் 16 வயதுடையவர்கள் உள்ளாட்சி தேர்தல்களில் வாக்கு செலுத்தும் உரிமையை பெற்றுள்ளனர்.
அதோடு தேர்தலில் வாக்கு செலுத்த வாக்காளர் அடையாள அட்டை மட்டுமின்றி, இங்கிலாந்து அரசால் விநியோகிக்கப்பட்ட வங்கி கார்டுகள், டிரைவிங் லைசன்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை பயன்படுத்துவது தொடர்பான சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட இருப்பதாகவும் இங்கிலாந்து அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.