கனடாவில் பிரபல பேக்கரி உற்பத்திகள் குறித்து விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை
கனடாவில் பிரபல பேக்கரி உற்பத்திப் பொருட்கள் சந்தையிலிருந்து மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
Enjoy Life என்ற பிரபல பண்டக் குறியைக் கொண்ட பேக்கரி உற்பத்திகளே இவ்வாறு சந்தையிலிருந்து வாபஸ் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
இந்த உணவுப் பொருட்களில் பிளாஸ்டிக் துண்டுகள் கலந்திருக்கலாம் என்ற அச்சத்தினால், சந்தையிலிருந்து பொருட்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
Enjoy Life Soft Baked Cookies in Snickerdoodle, Chocolate Chip and Double Chocolate Brownie flavours, Enjoy Life Chewy Bars - Chocolate Chip and Caramel and Enjoy Life Breakfast Ovals in Berry Medley and Chocolate Chip and Banana flavours. போன்ற பொருட்கள் இவ்வாறு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
இந்த வகை பேக்கரி உற்பத்திகள் இணைய தளம் வழியாக தேசிய ரீதியில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
உணவுப் பொருட்களை உட்கொண்ட எவருக்கும் பாதிப்பு ஏற்பட்டதாக பதிவாகவில்லை.
எவ்வாறெனினும், உணவுப் பொருட்களை வீசி எறிய வேண்டும் அல்லது கொள்வனவு சய்ய்த இடத்தில் திரும்ப கொடுக்க வேண்டுமென நிறுவனம் வாடிக்கையாளர்களிடம் கோரியுள்ளது.