கனடாவில் அண்மையில் களான் கொள்வனவு செய்தவரா? எச்சரிக்கை
கனடாவின் சந்தைகளிலிருந்து ஒரு வகை களான்கள் மீளப் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
எனோக்கீ களான் ( Enoki mushrooms) வகைகள் இவ்வாறு கனேடிய சந்தைகளிலிருந்து மீளப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனம் இந்த உத்தரவினை வழங்கியுள்ளது. லிஸ்திரியா எனப்படும் பக்றீரியா வகையினால் இந்த களான்களுக்கு தாக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
150 கிராம் எடையுடைய பக்கட்டுகளினால் இந்த களான் வகை விற்பனை செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கொலம்பியா, அல்பர்ட்டா மற்றும் ஒன்றாரியோவில் அதிகளவில் இந்த களான் வகை விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த களான் வகைகளை கொள்வனவு செய்த வாடிக்கையாளர்கள் அதனை வீசி விடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொள்வனவு செய்யப்பட்ட கடையிடம் மீள ஒப்படைக்கப்பவும் முடியும் என வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உணவினை உட்கொண்டு நோய்வாய்ப்பட்டதாக எவ்வித தகவல்களும் வெளியாகவல்லை. இந்த வகை பக்றீரியா தாக்கத்தினால் துர்நாற்றம் ஏற்படவோ அல்லது நிறமாற்றமோ இருக்காது என தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும், இந்த வகை களான்களை உட்கொள்வதனால் ஆரோக்கயம் பாதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வாந்தி, தலைசுற்றல், தொடர்ச்சியாக காய்ச்சல், தசை வலி, கடுமையான தலைவலி மற்றும் கழுத்து வலி என்பன ஏற்படக் கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.