பிரிட்டிஷ் கொலம்பியாவில் வெப்ப அலை தொடர்பில் எச்சரிக்கை
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் வெப்ப அலை நிலவும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய சுற்றாடல் திணைக்களம் இந்த எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு இடங்களில் இவ்வாறு வெப்ப அலை ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் சுமார் 40 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாரத்தின் நடுப்பகுதியில் அதிகளவில் வெப்பநிலை நிலவும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாகாணத்தின் சுகாதார அமைச்சர் ஏட்ரியன் டிக்ஸ் பொது மக்களிடம் வெப்ப அலை தொடர்பில் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
மக்கள் முடிந்த அளவு குளிர்ச்சியான இடங்களில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
வெப்ப அலை நிலவும் காலத்தில் மக்கள் வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய்களினால் பாதிக்கப்பட்டவர்கள் மிகக் கவனமாக இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முதியவர்கள் மற்றும் சிறுவர்கள் அதிக ஆபத்துக்களை எதிர் நோக்க நேரிடலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.