இந்தியாவில் குரங்கு அம்மை நோய் தொற்று
இந்தியாவில் முதன் முறையாக கேரளா கொல்லம் மாவட்டத்தை சேர்ந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதிசெய்யப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கேரள அரசுக்கு உதவுவதற்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது.
இந்தக் குழுவினர் நேரில் ஆய்வுசெய்து, மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

அதனை தொடர்ந்து இந் நபர் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து கடந்த 12 ஆம் திகதி திருவனந்த புறம் விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்தவர் என்று கேரளா சுகாதார துறை அமைச்சர் வீனா ஜோர்ஜ் தெரிவித்துள்ளதோடு அவரது உடல் நிலை சீராக இயங்கி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவருடன் முதன்மை தொடர்பில் இருந்த 11 பேர் கண்டறியப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ள வழிமுறைகளின் படி அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படவுள்ளதாக வீனா ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், கேரள அரசுக்கு உதவுவதற்காக உயர்மட்டக் குழுவை மத்திய அரசு அனுப்பியுள்ளது. இந்தக் குழுவினர் நேரில் ஆய்வுசெய்து, மாநில அரசுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்குவார்கள் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.          
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        