ஈரான் மீது புதிய தடைகளை விதிக்கும் ஐரோப்பா
ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டங்களை கடுமையாக அடக்கி வரும் நடவடிக்கைகளுக்கு எதிராக, புதிய தடைகளை (sanctions) விரைவில் முன்மொழிய உள்ளதாக ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டர் லெயன் அறிவித்துள்ளார்.
ஈரானில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியளிக்கிறது. மோசமான வன்முறை பயன்பாடும், தொடர்ச்சியான கட்டுப்பாடுகளும் கடுமையாக கண்டிக்கப்பட வேண்டியவை,” என்று தெரிவித்துள்ளார்.
அடக்குமுறைகளுக்கு பொறுப்பானவர்களுக்கு எதிராக கூடுதல் தடைகள் விரைவில் முன்மொழியப்படும். சுதந்திரத்திற்காக துணிச்சலுடன் போராடும் ஈரான் மக்களுடன் ஐரோப்பிய ஒன்றியம் உறுதியாக நிற்கிறது,” எனக் கூறியுள்ளார்.

ஈரானின் இஸ்லாமிய புரட்சி காவல் படை (IRGC) அமைப்பை தனது மனித உரிமை தொடர்பான தடைகள் பட்டியலில் சேர்த்துள்ளதாக உர்சுலா வான் டர் லெயன் தெரிவித்தார்.
இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிநாட்டு கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், “ஈரானுக்கு எதிராக மேலும் கடுமையான தடைகள் விதிப்பது குறித்து தற்போது உறுப்புநாடுகளிடையே ஆலோசனைகள் நடைபெற்று வருவதாக என கூறியுள்ளார்.
ஈரானில் இரண்டு வாரங்களுக்கு மேலாக தொடரும் போராட்டங்களுக்கு, அந்நாட்டின் மோசமான பொருளாதார நிலைமை முக்கிய காரணமாக இருப்பதாக பல சர்வதேச நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.