சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ஏதிலிகளை நாடு கடத்தும் ஐரோப்பிய நாடுகள்!
ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாகத் தங்கியுள்ள ஏதிலிகளை நாடு கடத்தும் நோக்கில், ருவாண்டாவில் விசேட மையமொன்றை அமைக்க ஐந்து ஐரோப்பிய நாடுகள் தீர்மானித்துள்ளதாக சர்வதேச தகவல்காள் தெரிவிக்கின்றன.
ஜேர்மனி, டென்மார்க், ஒஸ்திரியா, கிரீஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் இணைந்து இந்த மையத்தை நிர்வகிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரிக்கை
அதன்படி இந்த மையம் 2027ஆம் ஆண்டு திறக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. சட்ட நடவடிக்கைகள் நிறைவடைந்து நாடு கடத்தப்பட வேண்டிய நிலையில் உள்ள குடியேற்றவாசிகள் இந்த மையத்திற்கு அனுப்பப்படவுள்ளனர்.
அங்கு அவர்கள் ருவாண்டா சமூகத்துடன் இணைந்து வாழ்வதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், விரும்பினால் தமது சொந்த நாடுகளுக்குத் திரும்புவதற்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மையத்தின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளின்போது சுமார் 100 ஏதிலிகளை தங்கவைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதேசமயம் , இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் மனித உரிமை மீறல்கள் ஏற்படக்கூடும் என மனித உரிமைகள் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.