ஏவுகணைத் தாக்கிய ஐரோப்பாவின் மிகப்பெரிய அணுமின் நிலையம்: பீதியில் மக்கள்
ரஷ்ய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து ஐரோப்பாவின் மிகப்பெரிய அனுமின் நிலையம் மொத்தமாக செயலிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைனில் அமைந்துள்ள Zaporizhzhia அணுமின் நிலையமானது தற்போது உக்ரைன் படைகளால் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஏவுகணைத் தாக்குதல் சம்பவத்தால் அந்த அணுமின் நிலையத்தில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, செயலிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஒரு மாதம் முன்பு, ரஷ்ய படைகள் குறித்த அணுமின் நிலையத்தை கைப்பற்றிய பின்னர், இது ஆறாவது முறையாக மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது. இதனால் 18 டீசல் ஜெனரேட்டர்களை மொத்தமாக இயக்கப்படும் நிலைக்கு ஊழியர்கள் தள்ளப்பட்டனர்.
மட்டுமின்றி, தொடர்ந்து அணுமின் நிலையத்தில் இதுபோன்று மின்சாரம் துண்டிக்கப்படும் நிலை ஏற்பட்டால் அது ஆபத்தில் முடியும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொருமுறையும் நாம் தப்பிப்பிழைக்கிறோம், ஆனால் எப்போதும் சூழல் சாதகமாக இருக்காது என சூசகமாக, அதன் பின்னால் இருக்கும் ஆபத்தை அதிகாரிகள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
சுமார் 8 ட்ரோன்கள், தொடர்ந்து ஏவுகணை மழை பொழிந்தது எனவும், 80 ஏவுகணை வரையில் தொடுக்கப்பட்டதாகவும் உக்ரைன் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தான் அணுமின் நிலையம் மின்சாரத்தை இழந்ததாக தெரிய வந்துள்ளது.
அணுமின் நிலையமானது மின் இணைப்பில் தொடர்ந்து இயங்க வேண்டும், இல்லை எனில் அது ஆபத்தை விலைக்கு வாங்குவது போன்றது என கூறும் அதிகாரிகள், தற்போதைய சூழல் பீதியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.