மொத்தமாக இருளில் மூழ்கவிருக்கும் ஐரோப்பிய நாடுகள்: தயாராக மக்களுக்கு வேண்டுகோள்
ஐரோப்பாவில் குளிர்காலம் தொடங்கவிருக்கும் நிலையில், எரிசக்தி விவகாரம் பூதாகரமாக வெடிக்கும் என்றே தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் அலுவலகங்கள், குடியிருப்புகளில் வெப்பமூட்ட முடியாது, நினைவுச்சின்னங்கள், வரலாற்றுச்சிறப்பு வாய்ந்த கட்டிடங்கள் உள்ளிட்டவை விளக்குகள் அணைக்கப்பட்டு இருளில் மூழ்கும்.
இந்த நிலையில், ஏழைகள் மிகுந்த கிழக்கு ஐரோப்பாவில் மக்கள் விறகுகளை சேகரித்து வைக்கத் தொடங்கியுள்ளனர். ஆனால் பணக்கார நாடான ஜேர்மனியில் மக்கள் மாற்று ஏற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக கூறப்படுகிறது.
விளக்குகளை அணைத்து விருந்தினர்களை இருளில் சந்திக்க முடியாது என பலர் புலம்பத் தொடங்கியுள்ளனர். இதனிடையே, சில கடைகள் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே 750% மின் கட்டண அதிகரிப்பை எதிர்கொள்ளத் தொடங்கியுள்ளது.
ரஷ்யாவின் எரிசக்தியை ஐரோப்பா நம்பியிருப்பதால் உக்ரைன் மீதான போரை எரிசக்தி மற்றும் பொருளாதார நெருக்கடியாக மாற்றியுள்ளது, சமீபத்திய மாதங்களில் எரிசக்தி விலைகள் வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்து பெருமளவில் ஏற்ற இறக்கமாக உள்ளது.
இதனையடுத்து பல ஐரோப்பிய நாடுகள் எரிவாயு சேமிப்பை ஊக்கப்படுத்தியுள்ளதுடன், குளிர்காலத்திற்கு பயன்படுத்தும் நோக்கில் 86% வரையில் சேமித்தும் வைத்துள்ளது.
மட்டுமின்றி, எரிவாயு பயன்பாட்டை பெருமளவில் குறைக்கவும் ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்தி வருகின்றது.