வீடு வாங்கும் வாய்ப்பே இல்லை... பெரும்பான்மை கனேடிய மக்களின் மனநிலை
கனடாவில் குடியிருப்புகளின் விலை மற்றும் வட்டி விகிதங்கள் அதிகரித்தே வரும் சூழலில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் தாங்கள் ஒருபோதும் சொந்தமாக வீட்டை வாங்க முடியாது என்று நினைக்கிறார்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது.
இது தொடர்பில் செவ்வாய்க்கிழமை வெளியான அறிக்கை ஒன்றில், பதிலளித்தவர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் தங்கள் முதல் வீட்டை ஒருபோதும் வாங்க முடியாது என்று நம்புவதாக தெரிவித்துள்ளனர்.
அதாவது அந்த ஆய்வில் பதிலளித்த 33% மக்கள் தங்களால் புதிதாக ஒரு வீட்டை இனி சொந்தமாக்க முடியாது என்ற நிலைக்கு வந்துள்ளதாக கூறுகின்றனர்.
மட்டுமின்றி கனேடியர்கள் பணவீக்கத்தைப் பற்றி அதிக கவலையுடன் இருப்பதாகவும், 60 சதவிகிதம் பதிலளித்தவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை அது எவ்வாறு பாதிக்கும் என்று கவலைப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
கடந்த 12 மாதங்களில் குடியிருப்பு சந்தையில் விலை தொடர்ந்து சரிந்தே காணப்படுகிறது.